பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சார்பில் முதல் மாநில மாநாடு வெற்றி பெற பண்ணாரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் சார்பில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டை முன்னிட்டு வெற்றிக் கொள்கை திருவிழா சிறப்பாக நடைபெற வேண்டுமென
சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு பண்ணாரி அம்மன் கோவிலில்பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் s. பிரபு தலைமையில் தொண்டர்கள் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியை கையில் ஏந்தியபடி கோயில் வளாகத்தை சுற்றி வந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இதில் சத்தியமங்கலம் பவானிசாகர் புஞ்சைபுளியம்பட்டி கடம்பூர் ஆசனூர் தாளவாடி ஆகிய பகுதியைச் சேர்ந்த நகர ஒன்றிய நிர்வாகிகள் இளைஞர் அணி மாணவரணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்
சத்தியமங்கலம் செய்தியாளர்