தரம் 5 புலமைப் பரிசில்: வாகரை வம்மிவட்டவான் பள்ளி மாணவர்கள் மூவரின் பெருமை! 🏆

Date: 2025-01-25
news-banner
தற்போது வெளியாகியுள்ள தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கோறளைப்பற்று வடக்கு வாகரை கோட்டத்துக்குட்பட்ட வம்மிவட்டவான் வித்தியாலயத்தில் இம்முறை மூன்று மாணவர்கள் சித்திபெற்றதாக வித்தியாலய அதிபர்  சிவலிங்கம் இந்திரன் தெரிவித்தார். 

வாகரை வம்மிவட்டவான் வித்தியாலயத்தில் ஜெகதீஸ்வரன் அபிஷ்னன் 143 புள்ளிகளையும்,நவக்குமார் டிலுக்ஷிக்கா 143 புள்ளிகளையும்,ரகுக்குமார் ஷக்சனா 142 புள்ளிகளையும்  பெற்று சித்திபெற்றதுடன், 17 மாணவர்கள் 100 புள்ளிகளையும் பெற்று பாடசாலைக்கும் பாடசாலை சமூகத்திற்கும், கல்குடா வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். எனவே சித்திபெற்ற மாணவர்களுக்கும் கல்வி கற்பித்த  திருமதி. நிலாந்தினி விஜிதரன் ஆசிரியருக்கும், ஆரம்பக் கல்வியை கற்பித்த ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் பாடசாலை சார்பாக நன்றியையும் வாழ்த்துகளையும் வித்தியாலய அதிபர்  சிவலிங்கம் இந்திரன் தெரிவித்தார் .
குறித்த பாடசாலையானது மிகவும் அதிகஷ்ட பிரதேச பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது.

image

Leave Your Comments