சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி.

Date: 2023-12-20
news-banner
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மழைக்குப் பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று முதல் ஆறு நாட்களுக்கு நடைபெறுகிறது. 


இதில் மூன்று நாட்கள் நேர்கோட்டு பாதை மற்றும் பெரிய தாவர உண்ணிகள் கணக்கெடுப்பும், மூன்று நாட்களுக்கு மாமிச உன்னிகளின் தடயங்கள் மற்றும் எச்சங்கள் கணக்கெடுப்பும் நடைபெறுகிறது. 

மொத்தம் பத்து வனச்சரகங்களில் வனவர், வனக்காப்பாளர்கள் என ஆறு பேர் கொண்ட குழுக்களாக 150 பேர் கணக்கெடுப்பில் ஈடுபட உள்ளனர். இதில் வனச்சரகர் பழனிச்சாமி தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுக்களாக சத்தியமங்கலம் வனச்சரகத்திற்குட்பட்ட காட்டு பண்ணாரியில் கணக்கெடுக்கும் பணி துவங்கினர். மேலும் ரேடார், காம்பஸ், ஜிபிஎஸ் போன்ற நவீன உபகரணங்களை கொண்டு புலியின் எச்சம், கால் தடம் ஆகியவைகளை கணக்கில் கொண்டு ஆறு நாட்களுக்குப் பிறகு சென்னையில் உள்ள மண்டல அலுவலகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.

பேட்டி : திரு. பழனிச்சாமி, சத்தியமங்கலம் வனச்சரகர்.

image

Leave Your Comments