மன்னார் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக இதுவரை சுமார் 1898 குடும்பங்களை சேர்ந்த 7023 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவபிரிவு தெரிவித்துள்ளது
குறிப்பாக எமில்நகர்,ஜீவபுரம்,ஜிம்றோன் நகர்,பேசாலை,ஓலைத்தொடுவாய்,சாந்திபுரம்,வங்காளை,தேத்தாவாடி போன்ற பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளமையால் மக்கள் அருகில் உள்ள இடை தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள தன்னார்வளர்கள் பலர் இணைந்து பொது மக்களின் கோரிக்கைக்கு அமைவாக இடைத்தங்கள் முகாம்கள் மற்றும் வெள்ள அனர்த்ததால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று உணவு பொருட்கள் மற்றும் இதர உதவிகளை செய்து வருகின்றனர்
இந்த நிலையில் தொடர்சியாக மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றமையால் வெள்ள அனர்த்த பாதிப்புக்கள் ஏற்படும் வாய்புகள் காணப்படுகின்ற கிராமங்களை சேர்ந்த மக்கள் அருகில் உள்ள உறவினர்கள் வீடுகளையோ அல்லது நலன்புரிமுகாம்களையோ அவசர தேவைக்காக அடையாளப்படுத்தி வைக்குமாறு பிரதேச செயலகங்கள் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது...
மன்னார் நகர் நிருபர்
ஜோசப் நயன்