சத்தியமங்கலம் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் தீபாவளி பண்டிகை பாதுகாப்புடன் கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் தீபாவளி பண்டிகையை பாதுகாப்போடு பட்டாசு வெடிக்க வேண்டும் மேலும் பட்டாசுகளால் ஏற்படும் தீ விபத்துகள் குறித்தும் அவற்றை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரியவர்கள் மேற்பார்வையில் குழந்தைகளை பட்டாசு வெடிக்க செய்ய வேண்டும்.
ராக்கெட் போன்ற வாணங்களை குடிசைகள் இல்லாத திறந்த வெளியில் வெடிக்க செய்ய வேண்டும்.
சாலையில் பட்டாசு வெடிக்கச் செய்வது இரு மடங்கு ஆபத்தானது. இதனால் தீ விபத்துட சாலை விபத்தும் ஏற்பட வாய்ப்புண்டு.
குழந்தைகளில் சட்டைப் பையில் பட்டாசுகளை வைத்திருப்பது ஆபத்தானது.
வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கவும் திரும்ப கொளுத்தவும் அனுமதிக்க கூடாது.
ஈரமான பட்டாசுகளை திரும்ப வெடிக்கச் செய்ய முயற்சிக்கக்கூடாது.
பட்டாசுகளை வீட்டிற்கு வெளியே திறந்த மைதானத்தில் வைத்து வெடிக்கச் செய்வது பாதுகாப்பானது.
பட்டாசு கொளுத்தும்போது மிகவும் தளர்வான ஆடைகளை அணியக்கூடாது.
முடிந்த வரை பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.
வெடிகளை டின் பாட்டில்களில் வைத்து வெடிக்கச் செய்யாதீர்கள்.
நீண்ட வத்திகளைக் கொண்டு பட்டாசுகளை வெடிக்கச் செய்யுங்கள்.
எதிர்பாராத விதமாக உங்கள் மேல் தீ விபத்து ஏற்பட்டால் ஓடாதீர்கள். உடனே தண்ணீர் ஊற்றி அணையுங்கள் அல்லது கீழே படுத்து உருளுங்கள்.
தீப்புண்ணுக்கு உடனே தண்ணீர் ஊற்றுங்கள். இங்க், கீரிம் எண்ணெய் போன்றவற்ை தீப்புணில் தடவாதீர்கள்.
பட்டாசு வெடிக்கும்போது எப்போதும் பாதுகாப்பு முன்னேச்சரிக்கையாக ஒரு வாளி தண்ணீர் அருகில் வைத்திருப்பது நல்லது.
என பள்ளி மாணவ மாணவியருடைய எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் லயன்ஸ் கிளப் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
சத்தியமங்கலம் செய்தியாளர்
மகேஷ்பாண்டியன்