சத்தியமங்கலம் அருகே உள்ள மலை கிராம பகுதிகளில் ஒற்றை யானை தொடர்ந்து அட்டகாசம்...
உயிருக்கு பயந்து இரவு நேரங்களில் மரத்தின் மேல் குடில் அமைத்து உயிரையும் ,விவசாய பயிர்களை பாதுகாக்கும் பழங்குடியின மக்கள்...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கேர்மாளம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று கடந்த 20 நாட்களுக்கு மேலாக கேர்மாளம் ஊராட்சிக்கு உட்பட்ட சித்த நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கு வனப்பகுதியை ஒட்டி 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது இந்த விவசாய தோட்டத்து வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மக்காச்சோளம், ராகி, உருளைக்கிழங்கு ஆகியவை பயிரிட்டுள்ளார்.
மலைப்பகுதி என்பதால் பெரும்பாலும் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மானாவாரி விவசாயம் செய்து வருகின்றனர்
ஒரு ஏக்கர் விவசாய நிலத்திற்கு மக்காச்சோளம் பயிர் விடுவதற்கு 60 ஆயிரம் ரூபாய் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை வேலை ஆட்கள் கூலி நடவு பணி கூலி மருந்து செலவு ஏற்படுகிறது அதேபோல் ராகி ஒரு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாயும், உருளைக்கிழங்குக்கு ஒரு லட்ச ரூபாய் வரையும் செலவு ஏற்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 20 நாட்களாக கேர்மாளம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை ஒன்று மாலை 6 மணிக்கு விவசாய தோட்டத்திற்குள் புகுந்தால் காலை 6 மணி வரை விவசாயத் தோட்டத்திற்குள்ளேயே தஞ்சம் அடைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. அந்த யானையை விரட்ட முயன்றால் மனிதர்களை நோக்கி ஆக்ரோஷமாக துரத்தி வருகிறது இதனால் விவசாயத் தோட்டத்தில் காவலில் இருக்கும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
மாரிமுத்து என்பவரின் மக்காச்சோளம் தோட்டத்திற்குள் புகுந்து 1 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்தியது.இதனால் சுமார் ஒரு லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயி மாரிமுத்து வேதனையடைந்துள்ளார்.
இதுகுறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனக்கோட்டம் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உரிய நஷ்ட ஈடும் வழங்கவில்லை.
இந்த ஒற்றைக் காட்டு யானை கடந்த ஒரு ஆண்டுக்குள் மட்டும் இரண்டு பேரை விவசாய தோட்டத்திற்குள் புகுந்து அங்கு குடிசை அமைத்து விவசாய பயிர்களை பாதுகாத்திருந்த ஆண் ஒருவர் மற்றும் பெண் ஒருவரை தாக்கி கொன்றுள்ளது.
இதனால் அப்பகுதி மலை வாழ் மக்கள் அந்த ஒற்றை யானையைக் கண்டு அச்சமடைந்துள்ளனர் .
இந்த நிலையில் தங்களது விவசாய தோட்டத்தில் விவசாயம் செய்வதற்காக விவசாய கடன் மற்றும் நகைகளை அடமான வைத்து விவசாயம் செய்து வாழ்வாதாரத்தை தேடி வரும் நிலையில் அந்த ஒற்றை வீட்டின் பின்புறம் இருந்த 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் டேங்க்யை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் இரவு நேரங்களில் வீட்டிற்குள் புகுந்து மனிதர்களை தாக்கும் அபாயம் ஏற்பட்டு யானையிடமிருந்து தங்களது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த விவசாய பயிர்கள் மற்றும் தங்களது உயிரை பாதுகாக்க தோட்டத்துப் பகுதியில் உள்ள மரத்தில் (பரண்) குடில் அமைத்து இரவு நேரங்களில் தங்கி விவசாய பயிர்களை பாதுகாத்தும் தங்களது உயிரையும் பாதுகாத்து குடும்பத்துடன் மரத்தில் உள்ள குடிலில் தங்கி வருகின்றனர்.
இதேபோல் காட்டுப்பன்றிகள் உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டிருந்த காட்டிற்குள் புகுந்து அங்கு அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் இருந்த உருளைக்கிழங்குகளை சேதப்படுத்தியது.
மேலும் அந்த ஒற்றை யானை அதே பகுதியை சேர்ந்த ஜடைய சாமி, ஆனந்தன், சிவண்ணா ஆகியோரது விவசாய தோட்டத்திற்குள் புகுந்து அங்கு பயிரிட்டிருந்த மக்காச்சோளம் பயிர்களையும் சேதப்படுத்தி உள்ளது இதனால் அப்பகுதியில் கடந்த 20 நாட்களில் மட்டும் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் விவசாய பயிர்களை சேதப்படுத்தியும் அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகளையும் சோலார் மின் வேலிகளையும் சேதப்படுத்தி வருகிறது. இந்த ஒற்றைக் காட்டு யானை அட்டகாசத்தால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளன ர்.
அந்த ஒற்றை யானை கேர்மாளம் ஊராட்சிக்குட்பட்ட கானக்கரை, ஜே ஆர் எஸ் புரம், பூதாளபுரம் ஒருத்தி ,தழுதி மற்றும் கேர்மாளம் ஆகிய கிராம பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை விவசாய பயிர்களை சேதப்படுத்துவது, மனித உயிர்களை அச்சுறுத்துவது தொடர்கதையாக உள்ளது.
இதனால் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனக்கோட்ட வன அதிகாரிகள் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் அந்த ஒற்றை காட்டு யானை மனிதர்களை தாக்கிக் கொல்லும் முன் சோலார் மின்வெளி அல்லது அகழி அமைக்க வேண்டும் இரவு நேரங்களில் வனப் பணியாளர்கள் குழு ஒன்று அமைத்து ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் விவசாய நிலங்களுக்குள் யானைகள் புகுந்தால் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அந்த யானைகளை வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சத்தியமங்கலம் செய்தியாளர்
மகேஷ்பாண்டியன்