உறவுகள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்பதற்காக உங்கள் வாக்குகளை சிதறடிக்காமல் தகுதியானவர்களை தெரிவு செய்யுங்கள்-சட்டத்தரணி எஸ்.டினேசன்.
Date: 2024-10-24
தலைமன்னாரில் இன்றைய தினம் (23) தமிழரசுக் கட்சியின் தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்ட நிலையில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,,,
எதிர்வரும் 14 ஆம் திகதி இடம் பெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் பல கட்சிகள் பிரிந்து போட்டியிடுகின்றது. இதனால் இம்முறை தமிழரசுக் கட்சியின் ஆசனம் குறைவடையும் சந்தர்ப்பம் காணப்படுகின்றது.
ஆகவே மக்கள் ஒன்று திரண்டு தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் .
எமது பிரதிநிதித்துவத்தை மக்கள் உறுதிப்படுத்த வேண்டும். மக்கள் பொறுப்புணர்வோடு செயற்பட்டு தகுதியானவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.
உறவுகள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்பதற்காக உங்கள் வாக்குகளை சிதரடிக்காதீர்கள்.
வாக்களிக்கும் போது மக்கள் பொறுப்புடன் செயல்பட்டு தகுதியானவர்களை பாராளுமன்றம் அனுப்பி வையுங்கள் என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் பெருமளவானவர்கள் கலந்து கொண்டனர்.