பவானிசாகர் ஒன்றியம், தொப்பம்பாளையம் கிராம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தொப்பம்பாளையம் பாலத்தின் அருகில் உள்ள வாய்க்காலில் திருப்பூரை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 நபர்கள் பவானிசாகர் வாய்க்காலில் குளிக்கும் போது தந்தை தாய் மற்றும் மகள் 3 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர் அப்போது உறவினர்கள் கூச்சலிட அக்கரையில் குளித்த தனுஷ் மற்றும் கருப்புசாமி இருவரும் சேர்ந்து முதலில் தாயை உள் நீச்சல் மூலம் கருப்புசாமி காப்பாற்றினார் பின்பு தந்தை மற்றும் குழந்தையை தனுஷ் காப்பாற்றினார். இந்த வீர தீர செயலை பாராட்டி இலங்கை மறுவாழ்வு முகாம் தலைவர் திரு.நடராஜன் மற்றும் திரு.கணேஷ் (எ) சந்துரு அவர்கள் இருவரும் பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள். பள்ளி சார்பாக தலைமை ஆசிரியர் திருமதி. மணிமேகலை அவர்கள் மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பதக்கம் அணிவித்து வாழ்த்துக்கள் கூறினார்கள் உடன் பள்ளியின் ஆசிரியர்களும் வாழ்த்து கூறினார்கள்.
சத்தியமங்கலம் செய்தியாளர்
மகேஷ்பாண்டியன்