மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள்.. பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த மத்தம்பாளையத்தில் கடந்த இரண்டு மணி நேரமாக பெருமழை பெய்ததன் காரணமாக ஏழெருமை பள்ளத்தில் மழை வெள்ளம் அதிக அளவில் ஓடியது.இதில் கோட்டை பகுதியில் இருந்து மத்தம் பாளையத்தை நோக்கி வந்த இரண்டு கார்கள் அடித்துச் செல்லப்பட்டன. அருகில் இருந்தவர்கள் காருக்குள் இருந்தவர்களை மீட்டு காப்பாற்றினர். தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் மற்றும் போலீசார் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
மத்தம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், கோவனூர்,புதுப்புதூர், பழைய புதூர், உள்ளிட்ட பகுதிகளில் 3 மணி நேரமாக மழை பெய்து வருகிற