சுவிஸ் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான முதல் செயலாளர் ஜஸ்டின் கொய்லட் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.

Date: 2024-10-23
news-banner
சுவிஸ் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான முதல் செயலாளர் ஜஸ்டின் கொய்லட்    ( justine boillat)    தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை(22) மன்னாரிற்கு விஜயம்  ஒன்றை மேற்கொண்ட நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை(22) மதியம் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.

இதன் போது குறித்த குழுவினர் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ,மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடினர்.

இதன் போது மன்னார் மாவட்டத்தின் தற்போதைய நிலமைகள்,பொருளாதாரம், தொடர்பாகவும்,கேட்டறிந்து கொண்டதாக சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்தார்.

இதன் போது தற்போதைய ஜனாதிபதியின் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய பொறுப்பு கூறல்கள் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

மேலும் சிவில் சமூக அமைப்புகளின் செயல்பாடுகள் மற்றும் அவர்களின் நிலைப்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மன்னார் நகர்  நிருபர்
(ஜோசப் நயன்)
image

Leave Your Comments