மக்களின் உரிமை சார்ந்த விடயங்களில் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதற்கும் எமக்கு பாராளுமன்ற அதிகாரம் தேவையாக உள்ளது நமது கட்சி அதிக ஆசனங்களை கைப்பற்றும் போது ஒரு பேரம் பேசும் சக்தியாக மாற்றமடையும் அதற்கு எமது மக்கள் வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் -மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தியாகராஜா சரவணபவன்
கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உரிய வாழ்வாதாரத் திட்டங்கள் முன்னெடுக்க பட உள்ளதுடன் இவற்றையெல்லாம் முன்னெடுக்க எமக்கு பாராளுமன்ற அதிகாரம் தேவையாக உள்ளது மக்களின் உரிமை சார்ந்த விடயங்களில் பாராளுமன்ற த்தில் குரல் கொடுப்பதற்கும் நமது கட்சி அதிக ஆசனங்களை கைப்பற்றும் போது ஒரு பேரம் பேசும் சக்தியாக மாற்றமடையும் அதற்கு எமது மக்கள் வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனவும்
எமது கட்சியில் ஊழல் லஞ்சம் அற்ற வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் எனவும் பொது பாராளுமன்றத்திற்கு வினைத்திறன் உடைய உறுப்பினர்களை பெற முடியும் அதன் மூலம் எமது பிரதேசம் வளர்ச்சி அடைந்து பொருளாதார மும் முன்னேற முடியும் இதற்கு தமிழ் தேசிய சிந்தனையுடன் பயணித்து எமது மக்களையும் மண்ணையும் பாதுகாக்க நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தியாகராஜா சரவணபவன் (முன்னாள் மாநகர சபை முதல்வர் )நேற்று இரவு மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு கருத்து தெரிவித்தார்