பவானிசாகர் வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கொலையா தற்கொலையா என்பது குறித்து பவானிசாகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

Date: 2024-10-21
news-banner
ஈரோடு மாவட்டம் 
சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் வனச் சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனத்திற்குள் அழுகிய நிலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் இன்று கிடைப்பதாக பவானிசாகர் போலீசாருக்கு  தகவல் கிடைத்தது இத்தகவலையடுத்து பவானிசாகர் போலீசார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். 

அழுகிய நிலையில் ஆண் சடலம் இருந்ததால் போலீசார் இறப்புக்கான காரணம் குறித்து பிரேத பரிசோதனைக்கு பின் தெரியவரும் என தெரிவித்தனர். 


இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பதை தெரியவில்லை இச்சம்பவம் கொலையா? தற்கொலையா? என்பது குறித்து பவானிசாகர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன..

சத்தியமங்கலம் செய்தியாளர்  
மகேஷ்பாண்டியன் 



image

Leave Your Comments