அரசு பேருந்து மீது மினி லாரி மோதி விபத்து கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழப்பு.. 10 பேர் படுகாயம் - சத்தியமங்கலம்

Date: 2024-10-19
news-banner
சத்தியமங்கலம் அருகே அரசு பேருந்து மீது மினி லாரி மோதி விபத்து கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழப்பு.. 10 பேர் படுகாயம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புதூர் ரோடு அருகே சத்தியமான கோவை நெடுஞ்சாலையில்கோவையில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது அரசு பேருந்து ஒன்று புதுரோடு அருகே  அரசு மறுவாழ்வு மையம் அருகே வந்து கொண்டிருந்தபோது சத்தியமங்கலத்திலிருந்து கோவை  நோக்கி வந்த   ஈச்சர் லாரி எதிரே வந்த அரசு பேருந்தின் வலது பக்கமாக மோதியதில் பேருந்தில் பின்னால் அமர்ந்திருந்த 9 பேர் காயமடைந்தனர். 


 இந்த விபத்தில் லாரி டிரைவர் உட்பட பேருந்தில் பயணித்த 10 பேர் காயமடைந்தனர்.

இதில் 
சத்தியமங்கலம் அடுத்த கெம்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன்  நதீஷ் இவர் கோவை பீளமேட்டில் உள்ள
என் எஸ் அகாடமியில்
படித்து வருகிறார்.

நதீஸ் பேருந்து பின் பகுதியில் அமர்ந்திருந்த போது ஜன்னல் ஓரத்தில் இருந்த கம்பி முதுகில் குத்தி பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

image

Leave Your Comments