சத்தியமங்கலம் அருகே போலீசார் வாகன தணிக்கையில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சாரஸ் எனும் கஞ்சா பிசின் போதை பொருள் மற்றும் 1கிலோ 350 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து ஒருவர் கைது ....
கூட்டாளிகள் மூன்று பேரை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் போலீசாருக்கு கஞ்சா எனும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது இத்தகவலையடுத்து சத்தியமங்கலம் போலீசார் அங்கன கவுண்டன்புதூர் அருகே பெரியார் நகர் பேருந்து நிறுத்தத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தை திருப்பி கொண்டு தப்பியோட முயன்றார்.
அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து சோதனையிட்டபோது அவரிடம் 1கிலோ 350 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது இதனையடுத்து அந்த வாலிபரை கைது செய்து சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில் சத்தியமங்கலம் பகுதி சேர்ந்த வசந்த் என்பதும் இவர் கஞ்சா மற்றும் சாரஸ் எனும் கஞ்சா பிசின் போதை பொருளை ஒரு கிராம் 2500 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அவரிடம் இருந்து 1 கிலோ 350 கிராம் கஞ்சா மற்றும் சுமார் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள சாரஸ் எனும் 60 கிராம்
கஞ்சா பிசின் போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்து வசந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வழக்கில் வசந்த என்பவரின் கூட்டாளிகளான தக்ஷிணாமூர்த்தி, விக்கி, சந்தோஷ்குமார் ஆகிய மூன்று பேரை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சத்தியமங்கலம் செய்தியாளர்
மகேஷ்பாண்டியன்