சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வேட்டை தடுப்பு காவலர்கள் ...
வெளிமுகாமைக்கு பணி மாறுதல் செய்வதை கைவிடக்கோரி மாவட்ட வன அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர்...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர், விளாமுண்டி, சத்தியமங்கலம், டி என் பாளையம், தலமலை, கடம்பூர் ஆகிய வனச்சரங்களில் சுமார் 59 வேட்டை தடுப்பு காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் புலிகள் காப்பகத்தில் யானைகள் வனத்தை விட்டு வெளியேறாமல் பாதுகாப்பது, புலிகள் பாதுகாப்பு மற்றும் பல்வேறு வன குற்றங்கள் தடுப்பு சம்பவங்கள், வனவிலங்குகள் வேட்டையாடுவது தடுப்பு உட்பட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் உயர்கல்வி பட்டப்படிப்பு படித்தவர்கள் பெரும்பாலானோர் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் . இவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனர். வன பாதுகாப்பு பணியில் துறையின் அதிகாரியின் உத்தரவுகளுக்கு ஏற்ப எந்த பணி பாதுகாப்பும் இல்லா நிலையிலும் கூட சிரத்தோடு பணிபுரிந்து வருகின்றனர். வேட்டை தடுப்பு காவலர்கள் பத்தாண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருபவர்கள் பணி வரன்முறை செய்யப்படுவது போல தங்களின் பணியையும் வரன்முறைப்படுத்தப்பட வேண்டும். இந்த நிலையில் இவர்களை வெளி முகாமைக்கு மற்றும் பட்சத்தில் தங்கள் பணி பாதுகாப்பற்றதாக ஆகிவிடுவதோடு எதிர்காலத்தில் பணி வரன் முறைப்படுத்துதல் என்பது அறவே இல்லாதகிவிடும். எனவே வேட்டை தடுப்பு காவலர்களை வெளி முகாமைக்கு மாற்றாமல் தொடர்ந்து தொகுப்பு ஊதியத்திலேயே பணிபுரிய வாய்ப்பு அளிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இது குறித்து மாவட்ட வன அதிகாரி மண்டல வன பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்து யோசித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.
சத்தியமங்கலம் செய்தியாளர்
மகேஷ்பாண்டியன்