சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டியில் 2 மணி நேரமாக கொட்டி தீர்த்த கனமழையால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் அவதி ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள புஞ்சைபுளியம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மாலை கன மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த கனமழையால், புஞ்சை புளியம்பட்டி நகராட்சிக்குட்பட்ட தோட்ட சாலை, தங்க சாலை வீதி, பகுதியில் மழைநீருடன் கலந்து கழிவு நீர், மீண்டும் வீடுகளுக்குள் புகுந்தது, நம்பியூர் சாலை காந்திநகர் பகுதியில் உள்ள தரை பாலத்தை, மூழ்கி சென்ற மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாக்கடை தண்ணீருடன் கலந்த மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். இப்பகுதியில் உள்ள சாக்கடைகளை தூர்வாரி, மழைநீர் அடித்துச் செல்ல, அதனை சரி செய்ய வேண்டுமென நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.