சத்தியமங்கலம் பகுதியில் யானை உயரம் வளரும் காட்டு யானம் நெல் ரகம் நடவு தீவிரம் ...

Date: 2024-10-19
news-banner
சத்தியமங்கலம் பகுதியில் யானை உயரம் வளரும் காட்டு யானம் நெல் ரகம் நடவு தீவிரம் ... 

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து  கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி, பாசனத்திற்காக 120 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஈரோடு, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து ஏழாயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. 

தற்போது சத்தியமங்கலம், பவானிசாகர் ஆகிய பகுதிகளில், பாரம்பரிய நெல் ரகமான, யானை உயரம் வளரும் காட்டு யானம் நடவு நடைபெற்று வருகிறது. பாரம்பரிய நெல் ரகங்களில் மிக முக்கியமாக கருதப்படும் இந்த காட்டுயானம் 180 வயது உடைய நெல் ரகமாகும். 

இந்த அரிசியை உட்கொண்டால் யானை பலத்துடன், ஆரோக்கியமாக நெடுங்காலம் வாழலாம் என்றும், இந்த நெற்பயிர் குறைந்தது 6 முதல் 8 அடி வரை வளரக்கூடியது என்றும், காட்டில் இருக்கும் யானை, வளர்ந்த நெற்பயிருக்கு உள்ளே சென்று நின்றாலும், யானை இருப்பது கூட தெரியாத அளவு, இந்த நெல் உயர்ந்து காணப்படும் எனவும் விவசாயிகள் கூறுகின்றன. அதனால் இந்த நெல் ரகத்திற்கு காட்டு யானம் என அழைக்கப்படுகிறது என கூறினர். 

எண்ணில் அடங்கா சத்துக்களை தன்னுள்ளே கொண்ட இந்த நெல் ரகம், இயந்திரங்களால் நடவு செய்ய முடியாது எனவும், அறுவடையும் செய்ய முடியாது எனவும் அறுவடைக்குப் பின் வைகோலை இயந்திரம் மூலம் பண்டில் கட்ட முடியாது எனவும், ஆரம்பம் முதல் இறுதி வரை மனித உழைப்பால் மட்டுமே வளர்க்கப்பட வேண்டிய இந்த காட்டுயானம், சுமார் ஐந்து கிலோ நெல் ஒரு ஏக்கர் பயிர் செய்ய தேவைப்படுகிறது எனவும், நாற்றங்காலில் இருந்து எடுக்கப்பட்ட நெல் ஒரு அடிக்கு ஒரு அடி என்கிற இடைவெளியில் நடவு செய்யப்படுகிறது.

வறட்சியை தாங்கி வளரும் தன்மையை கொண்ட இந்த நெல் ரகம், சிவப்பு நிறத்தில் இருக்கும் எனவும், இந்த அரிசியை உட்கொள்வதன் மூலம், சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும், புற்றுநோய் ஏற்படுத்தும் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது எனவும், இந்த அரிசியில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிகப்படியாக இருப்பதால், இதயத்திற்கு மிகவும் சிறந்த ஒரு அரிசி எனவும், ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு கொஞ்சம் கொஞ்சமாக இந்த அரிசியின் மூலம் ஏறுவதால், நீண்ட நேரம் எனர்ஜியுடன் இருக்கலாம் எனவும், மெக்னீசியம், இரும்பு, சுண்ணாம்பு, ஜிங்க் சத்துக்கள் இதில் அதிகம் இருப்பதால் எலும்பு வலுவாகவும், யானை போன்ற பலமாகவும், உறுதியாகவும் இருக்க உதவும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

பவானிசாகர் கீழ்பவானி வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீர் 120 நாட்கள் மட்டுமே இருக்கும். ஆனால் இந்த நெற்பயிர் வளர 180 நாட்கள் ஆகும் எனவும், அதாவது 6 மாதம் வயதுடைய இந்த நெற்பயிர், தண்ணீர் இல்லாத காரணத்தால், விவசாயிகள் பெரும்பான்மையோர் இந்த நெற்பயிரை விளைவிப்பது இல்லை எனவும், இதை விளைவிக்க கூடுதலாக கிணற்று நீரோ, அல்லது ஆழ்குழாய் கிணறு கிணற்று நீரோ இருப்பவர்கள் மட்டுமே இந்த நெல்லை விளைவிக்க முடியும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பேட்டி :  ஸ்ரீராம், விவசாயி, சத்தியமங்கலம்.
சத்தியமங்கலம் செய்தியாளர்  
மகேஷ்பாண்டியன் 
image

Leave Your Comments