பவானிசாகர் ஒன்றியத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தொப்பம்பாளையத்திலுள்ள ஆசிரியர் திரு.ரா.ராஜ்கமல் அவர்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழக அரசு வழங்கிய 6 நாட்கள் "தொல்லியல் பயிற்சியில்" பயிற்சி பெற்றார். பின்பு தனது பள்ளி மாணவர்களுக்கு "தொன்மை பாதுகாப்பு மன்றம்" வழியாக பயிற்றுவித்தார். அதனால் விழிப்புணர்வு பெற்ற மாணவர்கள் ஆசிரியரிடம் ஊரில் தென்பட்ட பழமையான பொருட்களைப் பற்றி கூறினர். ஆசிரியர் திரு.ரா.ராஜ்கமல் கள ஆய்வு செய்து பழமையான பொருட்களான நடுக்கல், 250 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுள்ள தண்ணீர் தொட்டி வட்டக்கல் மற்றும் பழங்கால மக்கள் பயன்படுத்திய கல்லினால் ஆன பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை ஈரோடு மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பட்சியர் மதிப்புமிகு.திருமதி.பா.ஜென்சி அவர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆகவே 18-10-2024 அன்று ஈரோடு மாவட்ட காப்பட்சியர் திருமதி. பா.ஜென்சி மற்றும் திருமதி. சுமித்ரா காட்சிக்கூட உதவியாளர் அவர்கள் நேரில் ஆய்வு செய்து ஆசிரியர் மற்றும் மாணவர்களை பாராட்டினார் . காப்பட்சியர் அவர்கள் தொல்லியல் சார்ந்த கருத்துருக்களை மாணவர்களிடம் கூறினார். ஆசிரியர் திரு.ரா.ராஜ்கமல் கண்டெடுத்த தொல்பொருட்கள் அருங்காட்சியகத்திற்கு அன்பளிப்பாக தலைமை ஆசிரியர் திருமதி. மு.மணிமேகலை மற்றும் ஆசிரியர்கள் சேர்ந்து வழங்கினார்கள்.