பவானிசாகர் பேருந்து நிலையம் அருகே செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு வழங்கப்பட்ட இரும்பு பெட்டிக்கடையை அகற்றிவிட்டு அந்த இடத்தில் தனியாருக்கு விடப்பட்ட கடைகள் பேரூராட்சி நிர்வாகத்திடம் வணிகர் சங்க பேரமைப்புணர் முறையீடு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் பேருந்து நிலையம் அருகே 1983 ஆம் ஆண்டு செருப்பு தைக்கும் தொழிலாளியான நஞ்சப்பன் என்பவருக்கு அப்போது இருந்த கோவை ஜில்லா ஆட்சியர் இரும்பு பெட்டி அமைத்து செருப்பு கடை வைத்து கெள்ள அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் பவானிசாகர் பேரூராட்சி நிர்வாகம் அந்த பெட்டிக்கடையை அங்கிருந்து ஆற்றிவிட்டு அதே இடத்தில் வேறு இரண்டு நபர்களுக்கு கடை அமைக்க இட ஒதுக்கீடு செய்யப்பட்டு அங்கு கடை அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பவானிசாகர் வணிகர் சங்க பேரமைப்பு கூட்டமைப்பு சார்பில் பவானிசாகர் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று மனு அளிக்க சென்றனர் அப்போது அதிகாரிகள் யாரும் இல்லாததால் விரக்தி அடைந்த நிலையில் பணியாளர் ஒருவரிடம் மனுவை அளித்தனர் அந்த மனுவில் செருப்பு தைக்கும் தொழிலாளியான நஞ்சப்பனுக்கு அதே இடத்தில் கடை அமைக்க அனுமதி வழங்க வேண்டும்.
தற்போது அமைக்கப்பட்டுள்ள இடத்தில் எந்த அனுமதியின்றியும் கடை அமைக்கப்பட்டுள்ளது. கடை அமைக்க முறையாக ஏலம் நடைபெற வில்லை தற்போது உள்ள கடையை அகற்ற வேண்டும்.
பவானிசாகர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கடைகள் அமைக்கவும் வாடகைக்கு விடவோ இருந்தால் முறையாக ஏலம் விடப்பட்டு பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் அறிவிப்பு விட வேண்டும் என கோரிக்கை மனுவை அளித்தனர் .
இதில் பவானிசாகர் வாணிகர்கள் பேரவை சங்கம் மற்றும் பாஜக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு கட்சியினர் உடன் இருந்தனர்