இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகருடன் விசேட சந்திப்பு

Date: 2024-10-13
news-banner
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர்  எரிக் வால்ஷ்  (ERIC WALSH )மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிராடோ விற்கும் இடையில் இன்று சனிக்கிழமை(12) காலை 11 மணியளவில் யாழ்ப்பாணம் புங்குடு தீவில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

-குறித்த சந்திப்பில் மெசிடோ நிறுவனத்தின் பணியாளர்கள் தீவக, பெண்கள் வலையமைப்பு,மீனவ சமூகத்தினர்,மற்றும் சிவில் சமூகத்தினரையும் இணைத்து கூட்டுக் கலந்துரையாடலாக இடம் பெற்றது.

இதன்போது யாழ் தீவக மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு  பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் கனேடிய அரசினால் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற உதவி திட்டங்கள்  மற்றும் வடகிழக்கு மக்களின் உரிமைகள் சார்ந்த விடயங்களுக்கு வடகிழக்கு மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்தனர்.

இதன் போது வடக்கு கிழக்கு மக்கள் முகங்கொடுக்கும் பல்வேறு சவால்கள் குறித்தும் கனேடிய தூதுவரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்தார்.

மன்னார் செய்தியாளர் 
(ஜோசப் நயன்)
image

Leave Your Comments