கோபி கரட்ட டி பாளையம் லக்கம்பட்டி கிராமம் மெயின் ரோட்டில் உள்ள முஸ்லீம் மயானம் அகற்றக்கோரி அமைதி ஊர்வலம்

Date: 2024-01-03
news-banner
கோபி கரட்ட டி பாளையம் லக்கம்பட்டி கிராமம் மெயின் ரோட்டில் உள்ள முஸ்லீம் மயானம் அகற்றக்கோரி அமைதி ஊர்வலம்
           கோபி  கரட்ட டி பாளையம் லக்கம்பட்டி கிராமத்தில் கோபி சக்தி மெயின் ரோட்டில் குடியிருப்பு முஸ்லீம் மயானம் உள்ளது அது மெயின் ரோடு அருகே உள்ளதால் சாலை குறுகலாக உள்ளது இதனால் ஏராளமான விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது காவல்துறையின் அறிக்கையின்படி விபத்தினால் 14 பேர் உயிரிழந்தனர் 23 பேர் காயம் அடைந்துள்ளனர் இது தவிர ஏராளமான பேர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்காமல் இருக்கின்றார்கள் இந்த நிலையில் ஈரோடு - சத்தி விரிவாக்க பணிகளுக்கு அந்தப் பகுதியில் உள்ள கோவில்கள் கடைகள் ஆகியவைகளை இடித்து அப்புறப்படுத்தியுள்ளனர் ஆனால் அந்த மயானம் மட்டும் அப்புறப்படுத்தப்படவில்லை அந்த மயானத்தை அப்புறப்படுத்தி வேறு ஒரு இடத்தில் அவர்களுக்கு சகல வசதிகளுடன் இடத்தை ஒதுக்கி கொடுத்தும் அவர்கள் செல்ல மறுத்து முஸ்லிம்கள் சார்பில் ஒருவர் மயானத்தை அகற்றக்கூடாது என்று தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆகிவிட்டது நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனதால் அந்த மயானத்தை அகற்றி சாலையை விரிவுபடுத்தி பொதுமக்களின் உயிரை காப்பாற்ற வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொண்டு அந்தப் பகுதியைச் சார்ந்த ஆண்கள் பெண்கள் ஊர் பொதுமக்கள்ஆயிரம் பேருக்கு மேல் ஊர்வலமாக சென்று கோபி கோட்டாட்சியர் திவ்ய பிரியதர்ஷினி மற்றும் வட்டாட்சியர் உத்திர சாமி நெடுஞ்சாலைத்துறை ஏ டி இ அருள்செல்வன் ஆகியோரிடம் மனுக்களை அளித்தனர் கூட்டத்தில் கொங்கு வி.எம் பழனிசாமி வேலு கவுண்டர் ராதாகிருஷ்ணன் ஈரோடு வடக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் கேகே பழனிசாமி உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்


image

Leave Your Comments