ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்டம்ஏழு நாள் சிறப்பு முகாம்

Date: 2023-12-31
news-banner
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை அறிவியல்  கல்லூரியில் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்டம்ஏழு நாள் சிறப்பு முகாம்
               ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் (இருபாலர்)  கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் ஏழு நாள் சிறப்பு முகாம் நாள்: 27.12.2023 முதல் 02.01.2024 வரை
முதல் நாள் 27.12.2023
27.12.2023 புதன்கிழமை காலை 10 மணி அளவில் கல்லூரியில் இருந்து கவுந்தப்பாடி கிராம ஊராட்சி சமுதாயக்கூடத்திற்கு 50 மாணவர்களுடன் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் புறப்பட்டனர்.
காலை 11:30 மணியளவில் மாணவர்களை 5 குழுக்களாக பிரித்து முகாமில் நடைபெற உள்ள நிகழ்வுகளைப் பற்றி விவாதிக்கப்பட்டது.
பின்னர் மதிய உணவு முடிந்தவுடன் மாணவர்கள் தங்கும் இடத்தை சுற்றியுள்ள பகுதிகளை தூய்மை செய்தனர்.
பின்னர் 4 மணியளவில் கல்லூரியின் முதல்வர் முனைவர். ஆ. மோகனசுந்தரம் தலைமையில் துவக்க விழா நடைபெற்றது. 
இதில் சிறப்பு விருந்தினராக கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் திரு. பாவா.தங்கமணி கலந்து கொண்டு மாணவர்கள் தங்கள் பணிகளை எவ்வாறு திறமையாக செய்ய வேண்டும் என்பதை பற்றி விளக்கிக் கூறினார்.
மாலை 7 மணி அளவில் தன்னார்வலர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இரண்டாம் நாள் 28.12.2023
                  காலை 7 மணி அளவில் தன்னார்வ மாணவர்களுக்கு தியானப் பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.
காலை 10 மணி அளவில் கவுந்தப்பாடி மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள சுற்று சுவருக்கு வெள்ளையடித்தல் மற்றும் விளையாட்டு மைதானத்தை தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.
தன்னார்வ மாணவர்கள் மற்றும் மாணவிகள் பணியினை திறம்பட செய்து முடித்தனர்.
இந்நிகழ்விற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆகியோர் உதவி புரிந்தனர்.
பின்னர் மாலை 5 மணி அளவில் மாணவர்களுக்கு யோகாசனம் கற்றுக் கொடுக்கப்பட்டது.
மாலை 6.30 மணி அளவில் மாணவர்கள் கதை சொல்லும் நிகழ்வு நடைபெற்றது.
இரண்டாம் நாள் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.




image

Leave Your Comments