காட்டு யானைகள் கூட்டம் கிராம மக்கள் மற்றும் வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்..

Date: 2023-12-27
news-banner
27-12-2023  தாளவாடி அருகே கிராம பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டம் கிராம மக்கள் மற்றும் வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த அருளவாடி கிராம பகுதியில் இன்று காலை 10 க்கும் மேற்பட்ட காட்டு யானை கூட்டம் விவசாய தோட்ட பகுதிக்குள் புகுந்தது இதனை கண்ட கிராம மக்கள் அச்சமடைந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஜீரகள்ளி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் .

வனத்துறையினர் அருளவாடி கிராமத்திற்கு சென்றனர் அங்கு பத்துக்கு மேற்பட்ட யானைகள் கூட்டம் விவசாய தோட்ட பகுதிக்கு சுற்றி திரிந்தது அப்போது வனத்துறையினர் மற்றும் கிராம மக்கள் பட்டாசுகள் வெடித்து சத்தம் போட்டு ஒலி எழுப்பி யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர் அப்போது யானைகள் வழி தெரியாமல் அருளவாடி கிராமத்தில் இருந்து அருகே உள்ள கரளவாடி கிராம பகுதிக்குள் புகுந்தது தொடர்ந்து வனத்துறையினர் யானைகளை ஜீரகள்ளி வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு கர்நாடகா ஆகிய இரு மாநில எல்லையான அருளவாடி கிராம பகுதியில் இன்று காலை 10க்கும் மேற்பட்ட யானைகள் புகுந்துள்ளது.இந்த யானை கூட்டம் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் தண்ணீர் மற்றும் உணவு தேடி கர்நாடகா மாநிலம் வனப்பகுதியில் இருந்து வொளியேறி தமிழக வனப்பகுதி எல்லையான அருளவாடி கிராம பகுதி வழியாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஜீரகள்ளி வனப்பகுதிக்குள் உள்ளே புகுந்துள்ளது என வனத்துறையினர் தெரிவித்தன
image

Leave Your Comments