ஈரோடு வடக்கு மாவட்டம்
தி.மு.கழக துணைப்பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் சட்டமன்ற தொகுதி
மாதம்பாளையம் ஊராட்சி கள்ளிப் பாளையத்தில் தார்சாலை புதுப்பிக்கும் பணியை துவக்கி வைத்து அரியப்பம்பாளையம் பேரூராட்சி அம்பேத்கார் நகரில் அங்கன்வாடி கட்டிடம் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியம் புதுப்பீர்கடவு ஊராட்சியில் பல்நோக்கு மைய கட்டிடம் திறந்து வைத்து,கொத்தமங்கலம் ஊராட்சி உப்புபள்ளம் பகுதியில் நியாய விலை கடை திறந்து வைத்தார் பின்னர் உப்புபள்ளம் கிராம சாலை நபார்டு திட்டத்தில் 2கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்க அடிக்கல் நாட்டினார்.
இதனை தொடர்ந்து புளியம்பட்டி நகராட்சியில் நடைபெறுகிற வணிக வளாக கட்டிட பணியை ஆய்வு செய்தார் இந்த நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் மற்றும் சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முன்னாள் தலைவர் வி.சி.வரதராஜ் , சத்தியமங்கலம் நகர் மன்ற தலைவி ஜானகி ராமசாமி சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ வடக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ் மற்றும் திமுக நகர ஒன்றிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
சத்தியமங்கலம் செய்தியாளர்