சத்தியமங்கலம் காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலையத்தில் 15 காங்கேயம் இன மாடுகள் மற்றும் கன்றுகள் 4 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது....
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பகுத்தம்பாளையத்தில் உள்ள காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலையத்தில் காங்கேயம் இன ஆறு வயது முதல் நான்கு மாதம் வரை உள்ள காளை மாடுகள் மற்றும் கிடாரி கன்றுகள் கிடாரி மாடுகள் ஏலம் காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலையம் உதவி பேராசிரியர் மற்றும் தலைவர் கவிதா தலைமையில் உதவி பேராசிரியர் பிரபு முன்னிலையில் நடைபெற்றது இதில் சத்தியமங்கலம் ,பவானிசாகர், மேட்டுப்பாளையம், டி என் பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 25க்கும் மேற்பட்ட மாட்டு வியாபாரிகள் விவசாயிகள் கலந்து கொண்டு ஏலம் கோரினர்.
இதில் அதிகபட்சமாக காளை மாடுகள் 80 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது அதேபோல் கிடாரி மாடுகள் கிடாரி கன்றுகள் 10 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் ஏலம் போனது இதனால் 15 காங்கேயை இன மாடுகள் 4 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் விடப்பட்டது. ஏலத்தில் எடுக்கப்பட்ட மாடுகள் விவசாய பணிக்கு பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சத்தியமங்கலம் செய்தியாளர்