விவசாய நிலங்களை நாசமாக்கும் மான்கள்.

Date: 2025-01-09
news-banner
விவசாய நிலங்களை நாசமாக்கும் மான்கள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மாவட்ட வன அலுவலர்களிடம்  விவசாயிகள் கோரிக்கை.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் ஆலத்துக் கோம்பை, குமாரபாளையம், சதுமுகை சுற்றுவட்டார பகுதிகளில் பல நாட்களுக்கு முன்பு தங்கி இருந்த மான்கள் 200க்கும் மேல் பெருகிவிட்ட காரணத்தால் தற்போது அந்தப் பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் இரவு நேரங்களில் அட்டகாசம் செய்து சேதப்படுத்தி வருகிறது,இதனால் அப்பகுதி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதால் இதுகுறித்து பலமுறை வனத்துறை அலுவலகத்தில் முறையிட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர், இருந்தும்  எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் பெரு நடராஜன் தலைமையில் மாவட்ட அமைப்புச் செயலாளர் ஜோதி அருணாச்சலம் மற்றும் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலர் சந்தித்து நேற்று (08/01/2025) மனு கொடுத்தனர்.அதனை அடுத்து மாவட்ட வன அலுவலர் அவர்கள் உடனடியாக அந்த பகுதி ரேஞ்சர் அவர்களை அடைத்து உடனே நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டதுடன் விவசாயிகளுக்கு சேதமடைந்த பயிர்களுக்கான உரிய இழப்பீடு கொடுப்பதாக உறுதி அளித்தார்.


சத்தியமங்கலம் செய்தியாளர்  
மகேஷ்பாண்டியன் 



image

Leave Your Comments