பவானிசாகர் அணை பூங்கா எதிரே உள்ள ஆக்கிரமிப்புகள் நெடுஞ்சாலைத்துறையினர் ஜே சி பி இயந்திரம் மூலம் அகற்றம்......
புஞ்சை புளியம்பட்டி பவானிசாகர் -பண்ணாரி சாலை (மாநில நெடுஞ்சாலை-275) கி.மீ.17/8-18/2 வரையுள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் மீன்கடைகள், தள்ளுவண்டி கடைகள் மற்றும் சிறு வியாபாரிகள் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து வந்தனர்.
பவானிசாகர் பூங்காவிற்கு அன்றாடம் ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்வது வழக்கம். ஆக்கிரமிப்பாளர்களால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்ந்து பொதுமக்கள் நலன் கருதி பவானிசாகர் அணை கோட்டப்பொறியாளர் உத்திரவின் பேரில் தாளவாடி உதவிக்கோட்டப்பொறியாளர் மற்றும் இளநிலைப்பொறியாளர் அவர்கள் முன்னிலையில் பூங்கா எதிரே உள்ள மீன் கடைகள் பகுதியில் ஆக்கிரமப்பு செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர். இதில் சிலர் தானாக முன்வந்து அகற்றிக் கொண்டனர்.
சத்தியமங்கலம் செய்தியாளர்
மகேஷ்பாண்டியன்