கோபியை அடுத்த கொங்கார்பாளையத்தில் உள்ள நடராஜர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான கோயில் ஆகும் இந்த கோவிலில் வருடம் தோறும் ஆருத்ரா தரிசனம் அன்று நடராஜருக்கு மிகவும் சிறப்பாக அலங்காரம் செய்து அபிஷேகங்கள் செய்து திருவீதி உலா நடைபெறும் வருகின்ற 13-ஆம் தேதி அன்று ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளதால் அன்றைய தினம் நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சப்பரத்தில் வைத்து ஊர்வலம் நடைபெறும் அன்று மதியம் அன்னதானம் நடைபெறும் இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.