சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமின் ஐந்தாம் நாள் நிகழ்வு 07.01.2025 காலை 10 மணியளவில்.

Date: 2025-01-07
news-banner
சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமின் ஐந்தாம் நாள் நிகழ்வு 07.01.2025 காலை 10 மணியளவில் கல்லூரியின் முதல்வர் திரு க. ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நெகிழி ஒழிப்பு( மீண்டும் மஞ்சள் பை) பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது இதற்கு சிறப்பு விருந்தினராக சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் திரு செல்வராஜ் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் திரு பரமேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தனர் மேலும் இந்நிகழ்வில் நெகிழி பையை தவிர்த்து நம் தமிழக அரசு அறிவுறுத்தியபடி மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் மஞ்ச பையை பயன்படுத்த பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து பயணிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு நெகிழிப்பை வைத்திருந்த அனைவரிடமும் அவற்றை திரும்ப பெற்றுக் கொண்டு அதற்கு பதிலாக மஞ்சப்பை வழங்கி இனிவரும் காலங்களில் மஞ்சப்பை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மற்றும் இணை அலுவலர்கள் மாணவ மாணவியர்கள் 150க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.


சத்தியமங்கலம் செய்தியாளர்  
மகேஷ்பாண்டியன் 

image

Leave Your Comments