சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டமும் சத்தியமங்கலம் வருவாய் துறையின் தேர்தல் பிரிவும் இணைந்து தேர்தல் விழிப்புணர்வு பேரணி.

Date: 2025-01-07
news-banner
சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டமும் சத்தியமங்கலம் வருவாய் துறையின் தேர்தல் பிரிவும் இணைந்து தேர்தல் விழிப்புணர்வு பேரணியை முதல்வர் முனைவர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடத்தியது. இவ் விழிப்புணர்வு பேரணியை சத்தியமங்கலம் தேர்தல் துணை வட்டாட்சியர் திரு ராஜசேகர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். கல்லூரி வளாகத்தில் துவங்கிய பேரணி இந்திரா நகர் வி என் எஸ் நகர் வழியாக குமாரபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்த பதாகுகளை ஏந்தியும் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு கோஷங்களையும் எழுப்பி சென்றனர். விழிப்புணர்வு பேரணியில் கல்லூரியின் பேராசிரியர்கள் கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.



சத்தியமங்கலம் செய்தியாளர்  
மகேஷ்பாண்டியன் 

image

Leave Your Comments