சத்தியமங்கலத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 266 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

Date: 2025-01-04
news-banner
சத்தியமங்கலத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 266 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்... 500க்கும் மேற்பட்டோர் நடனமாடி உற்சாகம்... 
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 266 வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து, சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகம் அருகே வைக்கப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்கள். 

அனைத்து கட்சி அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான இளைஞர்கள் இதில் கலந்து கொண்டனர். இளைஞர்கள் ஆடி பாடி மகிழ்ந்து ஊர்வலமாக வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதேபோல் அரியப்பம்பாளையம் நேரு நகரில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் தலைமையில் வீரபாண்டிய கட்டபொம்மன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டு அவரது வாழ்க்கை வரலாறு குறித்து உரையாற்றினார். இதில் அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


சத்தியமங்கலம் செய்தியாளர்  
மகேஷ்பாண்டியன் 

image

Leave Your Comments