ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக மகளிா் செயல்வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது.
இதில் அதிமுக கழக இளைஞா், இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளா் பரமசிவம் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார்.
அப்போது பரமசிவம் அதிமுக எம் ஜி ஆர் ஜெயலலிதா எடப்பாடி ஆகியோர் செய்த சாதனை திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.
இதனை தொடர்ந்து முன்னால் அமைச்சர் செங்கோட்டையன் உரையாற்றிய போது அதிமுக ஆட்சியில் 1500 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது ஆனால் திமுக 1000 ரூபாய் பணம் மட்டுமே 2.1/2 ஆண்டுகளுக்கு பின்பு தான் வழங்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள திமுக மகளிர்களுக்கு இலவச பேருந்து என அறிவிக்கப்பட்டு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. சத்துணவு திட்டம் மகளிர் திட்டம் இன பல்வேறு திட்டங்களை அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு உடனடியாக நிறைவேற்றப்பட்டது என உரையாற்றினார்.
பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி மற்றும் ஈரோடு மாவட்ட மகளிா் அணி செயலாளா் சத்தியபாமா உட்பட 2000க்கும் மேற்பட்ட மகளிா் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
சத்தியமங்கலம் செய்தியாளர்
மகேஷ்பாண்டியன்