சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமப் பகுதியில் உள்ள பசு மற்றும் காளை மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Date: 2025-01-01
news-banner
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமப் பகுதியில் உள்ள  பசு மற்றும் காளை மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கால்நடை பராமரிப்புதுறை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனத்துறையினர் இணைந்து சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பீக்கிரிபாளையம் கிராமத்தில் 6 சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகம் நடத்தப்பட்து. 

இதில் சிக்கரசம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 150  பசு மற்றும் காளை மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்து. 
இந்த முகாம் கவுந்தப்பாடி கால்நடை மருத்துவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது இதில் சிக்கரசம்பாளையம் கால்நடை உதவி மருத்தூர்  திருவேங்கடம் உதவியாளர்  ராபின்சன், கால்நடை செயற்கை கருவூட்டல் பணியாளர்விஜயகுமார் கால்நடை பராமரிப்பு மற்றும் வனத்துறை கால்நடை ஆய்வாளர்
வீரக்குமார் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு முகாமை சிறப்பாக நடத்தினர்.

இதே போல் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள கால்நடை மருத்துவமனை மருத்துவர்கள் மூலம் இந்த கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது தொடர்ந்து நடைபெற உள்ளதாகவும் கால்நடை உதவி மருத்துவர் திருவேங்கடம் தெரிவித்துள்ளார் இதனை மக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.


சத்தியமங்கலம் செய்தியாளர்  
மகேஷ்பாண்டியன் 



image

Leave Your Comments