தொழிற்சாலை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இசைவாணை அனுமதி இன்றி செயல்பட்டு வந்ததொழிற்சாலை மீது நடவடிக்கை

Date: 2023-12-27
news-banner
தொழிற்சாலை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய  இசைவாணை அனுமதி இன்றி செயல்பட்டு வந்ததொழிற்சாலை மீது நடவடிக்கை
        ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அருகே  அண்ணாநகர் பகுதியில் செயல்பட்டு வந்த பப்ளூ ரப்பர் தொழிற்சாலை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய  இசைவாணை அனுமதி ( CTO) இன்றி செயல்பட்டதையடுத்து, 
        தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் இயக்கங்களும் பொதுமக்களும் புகார் தெரிவித்ததை அடுத்து , மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உத்தரவின் பேரில் முதலில் பப்ளூ ரப்பர் ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது, 
        மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதையும் மீறி, ரப்பர் ஆலை ஜெனரேட்டர் உதவியுடன் சட்ட விரோதமாக மீண்டும் இயங்கிய போது தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தீவிர முயற்சி மற்றும் போராட்டத்தின் காரணமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவின் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆலையை அதிகாரிகள்  சீல் வைத்து மூடினர்.
         இந்த பப்லு ரப்பர் தொழிற்சாலை உரிமையாளர் கேரளாவைச் சேர்ந்த கேரளாவை சேர்ந்தவர் டோனி  . கேரளாவில் இதுபோன்ற நாசகர ஆலைகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இதுபோன்ற ஆலைகளை தொடங்கி பாழ்படுத்தி வருகின்றனர்.
         பல்வேறு நடவடிக்கைகள் அரசு சார்ந்த துறைகளால் எடுக்கப்பட்டாலும்,  சட்டவிரோதமாக இயங்கி கொள்ளையடித்து வந்த, எதற்கும் அடங்காத ரப்பர் தொழிற்சாலை உரிமையாளர் கேரளாவைச் சேர்ந்த டோனி, தனக்கு சொந்தமான கேலக்ஸி கிரசர் மற்றும் மூடப்பட்ட கல்குவாரியில், (இது புலிகள் சரணாலயம் வனப்பகுதியை ஒட்டி உள்ளது)  வைத்து மீண்டும் கடந்த ஒரு மாத காலமாக பப்ளூ ரப்பர் ஆலையை ரகசியமாக நிறுவி, தொடர்ச்சியாக ரப்பர்  தொழிற்சாலையை இயக்கியது தெரிய வந்ததை அடுத்து விவசாய அமைப்பினர் செய்த புகாரின் பேரில், தொழிற்சாலையை உடனடியாக ஆய்வு செய்த வருவாய் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட அனைத்து அரசு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கல்குவாரி மற்றும் அதை சார்ந்த கட்டிடங்களை சீல் வைத்ததுடன் தொழிற்சாலையில் பணிபுரிந்த மூவர் மற்றும் தொழிற்சாலையின் உரிமையாளர் ஆக மொத்தம் நால்வர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

image

Leave Your Comments