ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கு மற்றுமொரு தேசிய விருது.
2024 ம் ஆண்டு தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட அனைத்து செயற்பாடுகளிலும் சிறப்பாக செயற்பட்ட மை மற்றும் வாசிப்பு ஊக்குவிப்பு திட்டங்களை செயற்படுத்தியமைக்காக 2024.12.19ம் திகதி விளையாட்டுத் துறை அமைச்சின் டங்கன் வைட் கேட்போர் கூடத்தில் நடை பெற்ற வைபவத்தில் கெளரவ புத்தசாசன கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சர் திஸாநாயக்க அவர்களினால் பாடசாலை முதல்வர் அல்ஹாஜ் MA.ஹலீம் இஸ்ஹாக் அவர்களிடம் விருதும் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மத்தி வலயப் பாடசாலைகளில் ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) இவ்விருதினை பெற்றுக் கொண்டமை சிறப்பம்சமாகும். குறித்த தேசிய விருதினை பாடசாலை பெற்றுக் கொள்வதற்கு வழிகாட்டிய பாடசாலை அதிபர் மற்றும் பிரதம நூலகர், நூலக உதவியாளர்கள் நூலக குழுவினர் ஆகியோருக்கு பாடசாலை சமூகம் சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.