புரட்சி தலைவர் MGR அவர்களின் நினைவு நாளில் அம்மா முன்னேற்ற கலகத்திதின் சார்பில் ஊர்வலம்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதய தெய்வம் புரட்சி தலைவர் எம். ஜி .ஆர். அவர்களின் நினைவு நாளில் கழகப் பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் .டி. டி. வி .தினகரன் ஆணைக் கிணங்க மண்டலப் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் மாண்புமிகு. சி. சண்முகவேல் ஆலோசனை கிணங்க ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட கழக செயலாளர் சரவணகுமார். அவர்கள் தலைமையில். புன்செய் புளியம்பட்டி பேருந்து நிலையம் முன்பு உள்ள புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர்.திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது .
புளியம்பட்டி காவல் நிலையம் அருகில் உள்ள அண்ணாமயார் . கோவில் அருகில் இருந்து பேருந்து நிலையம் வரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மாவட்ட கழக செயலாளர் சரவணக்குமார் தலைமையில் ஊர்வலமாக வந்தனர்.
இதில் கழகத்தின் அமைப்புச் செயலாளர் துளசி மணி , பவானி சாகர் தொகுதி பொறுப்பாளர்கள் பி.பி.அண்ணாதுரை , தங்கவேல் புளியம்பட்டி நகர செயலாளர் திரு பவுண்டரி பழனிச்சாமி அவர்கள் ஒன்றிய கழக செயலாளர்கள் திரு. அமரன் திரு. ராமராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.அப்போது எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமமுக நிர்வாகிகள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து நிர்வாகிகள் மற்றும் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.