சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது..

Date: 2024-12-16
news-banner
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் 62 ஆவது பிறந்தநாளையெட்டி தங்கத்தேர்  இழுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது..

   ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் உள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் ஈரோடு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்றம்  கழக மாவட்ட  செயலாளர் எஸ். சரவணகுமார் தலைமையில் , கழக அமைப்புச் செயலாளர் துளசிமணி முன்னிலையில் பண்ணாரி அம்மன் கோவிலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி‌.டி.வி தினகரன் அவர்கள் 62வது பிறந்தநாள் தினத்தையொட்டி டி.டி.வி தினகரன் நோய் நொடியின்றி நீடோடி பல்லாண்டு வாழ வேண்டும், அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி மிகப்பெரிய கட்சியாக தமிழகத்தில் வளர்ந்து நிற்க வேண்டும் அவர் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைந்து தமிழக மக்களை தீய சக்திகளிடம் இருந்து மீட்டெடுத்து ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு கோவில் வளாகத்தில் தங்க தேரில் அலங்கரிக்கப்பட்ட அம்மனை வளாகத்தில் சுற்றிலும் தேர் இழுத்து வலம் வந்து வழிபட்டனர்.

 இதில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோபிசெட்டிபாளையம் , பவானிசாகர்  உட்பட பல்வேறு பகுதியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டம், ஒன்றிய,நகர, மாவட்ட சார்பு அணி பேருர்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

பின்னர் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

சத்தியமங்கலம் செய்தியாளர்  
மகேஷ்பாண்டியன் 

image

Leave Your Comments