தாளவாடி மலைப்பகுதியில் போதைப் பொருட்கள் தடுப்பது மற்றும் விற்பனை செய்யப்படுவது குறித்து அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது..

Date: 2024-12-16
news-banner
தாளவாடி மலைப்பகுதியில் போதைப் பொருட்கள் தடுப்பது மற்றும் விற்பனை செய்யப்படுவது குறித்து அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம்
தாளவாடி  
வட்டாட்சியர்  அலுவலகத்தில்  
ஈரோடு மாவட்ட உதவி ஆணையர் (கலால்) (பொறுப்பு) திரு.ராம்குமார் அவர்களின் 
தலைமையில்  கள்ளச்சாராய ஒழிப்பு மற்றும் போதைப் பொருட்கள் பயன்பாட்டினை தடுப்பது குறித்தும்  வருவாய் துறை , காவல் துறை, வனத்துறை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது . இதில் வட்டாட்சியர் சுப்ரமணியம், காவல் ஆய்வாளர் வேல்முருகன் , வட்டார வளர்ச்சி அலுவலர் அர்த்தநாரீஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் முன்னிலையில். 

தாளவாடி வட்டம் அனைத்து வியாபாரிகள் சங்கம், தேநீர் கடை உரிமையாளர்கள் சங்கம், மற்றும் இதர விற்பனையாளர் சங்க நிர்வாகிகளுடன் கூட்டம் நடத்தப்பட்டு போதைப்பொருட்கள் தடுப்பது மற்றும் விற்பனை செய்வது குறித்தும்  தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கர்நாடக மது விற்பனை தடுப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.


சத்தியமங்கலம் செய்தியாளர்  
மகேஷ்பாண்டியன் 

image

Leave Your Comments