சத்தியமங்கலத்தில், ஜே.ஜோ பைரவி வித்யாலயா துவக்க விழா.
சத்தி -டிச- 12.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், கோட்டுவீராம்பாளையத்தில், ஜே.ஜோ பைரவி வித்யாலயா பள்ளி துவக்க விழா நிகழ்ச்சி,பள்ளியின் முதல்வர் என். ரஞ்சனி தலைமையில் நடைபெற்றது மாண்டேஸ்வரிகல்விபோதானா முறையில், விளையாட்டு முறை கல்வியுடன், குழந்தைகள் தானாக கற்று உணர்தல் வகையிலான, ஸ்மார்ட் வகுப்பறைகளை, பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி மைய முன்னாள் கண்காணிப்பாளர் (ஓய்வு) வி தனலட்சுமி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றி பள்ளியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் சத்யா மருத்துவமனை மருத்துவ அலுவலர் டி. தனலட்சுமி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர். பள்ளி துவக்க விழாவில் குழந்தைகள், குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சத்தியமங்கலம் செய்தியாளர்
மகேஷ்பாண்டியன்