சத்தியமங்கலம் பேருந்து நிலையம் முன்பு கிரஷர் பொருட்களின் விலை உயர்வை ரத்து செய்யக்கோரி சத்தியமங்கலம் தாலுகா கட்டுமான துறையை சார்ந்தவர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் முன்பு எம்-சாண்ட் பி-சேன்ட் ஜல்லிக்கற்களின் விலையை 11% மாக கிரஷர் உரிமையாளர்கள் கடுமையாக உயர்த்தி உள்ளார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் விலை உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் 11% வீதம் விலை உயர்வு என்பது பொதுமக்களையும் கட்டுமான துறையில் ஈடுபட்டு உள்ளவர்களையும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.
இதனால் கிரஷர் உரிமையாளர்கள் உயர்த்தியுள்ள கட்டுமான பொருட்களின் விலை உயர்வை ரத்து செய்யக்கோரி சத்தியமங்கலம் பேருந்து நிலையம் முன்பு கட்டுமான துறையை அமைப்புகளின் பெறுப்பு தலைவர் பாலமுருகன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்ந ஆர்ப்பாட்டத்தில் 35க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சத்தியமங்கலம் செய்தியாளர்
மகேஷ்பாண்டியன்