ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு ..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி நகராட்சி பகுதியில் கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான மந்தை பொறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வணிக வளாகம் கட்டும் நகராட்சியை கண்டித்தும், சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக ஓடையின் குறுக்கே கட்டிடம் கட்டி வரும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், இதற்கு துணை போகும் நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வீட்டு வரி, சொத்து வரி, , குப்பை வரி ஆகியவை உயர்த்தப்பட்டதை கண்டித்தும் இன்று காலை 9 மணியிலிருந்து புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் திறக்கப்படாமல், தங்களது எதிர்ப்பை காண்பித்து கடை அடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இது தவிர புஞ்சை புளியம்பட்டியில் உள்ள தினசரி மார்க்கெட் வளாகத்தில் உள்ள 108 கடைகளும் இன்று மூடப்பட்டதால், அங்கு மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றது. மேலும் பேருந்து நிலையம் உள்பகுதியில் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால், பேருந்தில் வந்த பயணிகள் சிரமப்பட்டனர்.
மேலும் இன்னும் சிறிது நேரத்தில் பேருந்து நிலையம் அருகே உண்ணாவிரத போராட்டம் துவக்க உள்ளதாக அறிவித்த நிலையில் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், அதிமுக, இந்திய தேசிய காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, பாரதிய ஜனதா, எஸ் டி பி ஐ, தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், தமிழக வெற்றி கழகம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் இந்த போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை சத்தியமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
இதனால் காவல்துறையினருக்கும் போராட்டக் குழுவினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது அப்போது புஞ்சை புளியம்பட்டி நகர செயலாளர் அதிமுகவை சேர்ந்த மூர்த்தி என்பவரை போலீசார் வலுக்கட்டாயமா வாகனத்தில் ஏற்ற முயன்ற போது காவல்துறையை கண்டித்து திமுக அரசு கண்டித்து கோஷமிட்டார்..
சத்தியமங்கலம் செய்தியாளர்
மகேஷ்பாண்டியன்