கோபிசெட்டிபாளையம் அருகே விவசாய தோட்டத்தில் இறந்து கிடந்தால் பெருமாள் கழுகு பத்து ஊர் கிராம மக்கள் 7 நாட்களாக வழிபட்டு சனிக்கிழமை இறுதி சடங்கு செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த அரக்கன் கோட்டை அருகே உள்ள மோதூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் இவர் அரக்கன் கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார் .இவரது விவசாயத் தோட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெருமாள் கழுகு என்று அழைக்கப்படும் கழுகு ஒன்று இறந்து கிடந்தது.
வயது முதிர்வு காரணமாக அந்த கழுகு இறந்ததாக தெரிய வந்தது.
அப்போது ஊராட்சி தலைவர் சேகர் தனது ஊர் மக்களுக்கு தெரிவித்து ஊர் மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
இறந்து கிடந்த பெருமாள் கழுகை சாஸ்திரம், சம்பிரதாயம் படி ஒரு மனிதன் இறந்தால் இந்து முறைப்படி எப்படி அடக்கம் செய்வார்களோ அதன்படி அடக்கம் செய்ய பெருமாள் கழுகை அடக்கம் செய்ய வேண்டும் என்ற ஜதீகம் உள்ளது. அதுவும் பெருமாள் கழுகை சனிக்கிழமை தினத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என்பதால் மோதூர் கிராம மக்கள் இறந்து கிடந்த பெருமாள் கழுகை மண் பானைக்குள் வைத்து.தினந்தோறும் பூஜை செய்து வழிபட்டனர்.
இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை இன்று காலை மோதூரில் இருந்து எடுத்துக்கொண்டு அரக்கன்கோட்டை வாய்க்கால் கரையோரம் பெருமாள் கழுவிற்கு இந்துமதம் சாஸ்திரப்படி சம்பிரதாயம் செய்யப்பட்டு மஞ்சள் சந்தனம் ஆகியவற்றால் குளிப்பாட்டி விறகுகள் அடுக்கப்பட்டு எரியூட்டப்பட்டது.
அதன் பின் அதன் அஸ்தியை மண் பானைக்குள் வைத்து பவானி ஆற்றில் கரைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டது.
இதுகுறித்து ஊர் பெரியவர்கள் கூறுகையில்
பெருமாளுக்கு உகந்த வாகனமாக கருதப்படும் பெருமாள் கழுகை முன்னோர்கள் ஒரு தெய்வமாக வழிபட்டு வந்தனர் இதனால் பெருமாள் கழுகை இறந்ததையடுத்து இந்து சம்பிரதாய சாஸ்திரப்படி முன்னோர்கள் எப்படி வழிபட்டார்களோ அதன்படி தற்போது தங்கள் ஊர் மக்களும் அந்த வழிபாட்டு முறையை தொன்று தொட்டு கடைப்பிடித்து வருகிறோம் இதனால் பெருமாள் கழுகை இதுபோன்று பூஜையில் செய்து வழிபட்டு இறுதிசடங்கு செய்தால்,விவசாயம், ஊர் செழிக்கும் ,மலை வளம் பெருகும், நோய் நொடியின்றி ஊர் மக்கள் நலத்துடன் இருப்பார்கள் என்பது ஐதீகம் என கூறினார்.
சத்தியமங்கலம் செய்தியாளர்
மகேஷ்பாண்டியன்