சத்தியமங்கலம் அடுத்த அக்கரைதத்தப்பள்ளி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ செல்வ கணபதி ஆலய கும்பாபிஷேக விழா

Date: 2024-12-05
news-banner
சத்தியமங்கலம் அடுத்த அக்கரைதத்தப்பள்ளி கிராமத்தில் பவானி ஆற்றங்கரையோரம் உள்ள அருள்மிகு ஶ்ரீ செல்வ கணபதி ஆலய கும்பாபிஷேக விழா.

வெகுவிமரிசையாக நடைபெற்றது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அக்கரை திருத்தப்பள்ளி கிராமத்தில் பவானி அக்கரைதத்தப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது 
அருள்மிகு ஸ்ரீ செல்வ கணபதி இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் விழா. 

04.12.2024 புதன் கிழமை மாலை 3 மணிக்கு மேல் 
மங்கள இசை, முலை பாளிகை, தீர்த்தக்குடமானது வானவேடிக்கையோடு உச்சி மாகாளியம்மன் ஆலயத்தில் இருந்து எடுத்து வரப்பட்டது.

4 மணியளவில் மங்கள இசை, கணபதி பூஜை, மஹா சங்கல்பம், வாஸ்த்து பூஜை, வாஸ்து ஹோமம் நடைபெற்றது.

5 மணியளவில் மங்கள இசை, முதலாம் கால யாகவேள்வி ஆரம்பம், பூர்ணாஹூதி, தீபாராதனை, தீர்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டது.
ஆலயத்தின் முக்கிய விழாவான கும்பாபிஷேகம் (05.12.2024) வியாழக்கிழமை காலை 7.35 மணிக்குமேல்
மங்கள இசை, இரண்டாம் கால யாகவேள்வி மஹா கணபதி ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், சர்வ காயத்ரி ஹோமம் நடத்தி  
காலை 10.15 மணியளவில் யாக கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது . 

இதனை தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் பூஜை செய்து தீபாராதனை நடைபெற்றது பின்னர் பக்தர்களுக்கு தீர்த்தம் 
பிரசாதம் வழங்கப்பட்டது. 

இந்த கும்பாபிஷேக விழாவில் அக்கரைத்த பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


சத்தியமங்கலம் செய்தியாளர்  
மகேஷ்பாண்டியன் 

image

Leave Your Comments