சத்தியமங்கலத்தில் ஒக்கலிக கவுடர் மகாஜன சங்கம் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோவை ரோடு எஸ் ஆர் டி கார்னரில் ஈரோடு மாவட்டம் ஒக்கலிக கவுடர் மகாஜன சங்க அலுவலம் திறப்பு விழா நடைபெற்றது இந்த விழாவில் தமிழ் நாடு ஒக்கிலிக கவுடர் மகாஜன சங்க மாநில தலைவர் வெள்ளியங்கிரி கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து கணபதி யாக பூஜை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் ஒ பி சி அணி தலைவர் ரத்தினசாபாபதி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அப்போது ஒக்கலிக கவுடர் சமுதாயாத்தை சேர்ந்தவர் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள நபர்கள் ஒருவர் வீதம் ஐம்பது ரூபாய் கட்டணம் செலுத்தி உறுப்பினர்களாக சேர்ந்து கொள்ள வேண்டும். அலுவலக கட்டிட மையத்திலேயே தமக்கென்று இலவசமாக இணையதள சேவை மையம் உருவாக்கப்பட உள்ளதாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட தலைவர் வேலுமணி செயலாளர் சக்திவேல் பொருளாளர் மூர்த்தி வேல் மற்றும் புஞ்சைபுளியம்பட்டி முன்னாள் தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
சத்தியமங்கலம் செய்தியாளர்
மகேஷ்பாண்டியன்