சத்தியமங்கலம் அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள்

Date: 2024-12-05
news-banner
சத்தியமங்கலம் அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மற்றும் பத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள்..

ஈரோடு மாவட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கல்குவாரிக்கு அனுமதி அளித்த அதிகாரிகள்  மீது அடுக்கடுக்காக குற்றம் சாட்டிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்..


ஈரோடுமாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த விண்ணப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட  குரும்பபாளையம் கிராமத்தில் (சுமார் 05.70 ஏக்கர்)  பரப்பளவிலான  சாய்சதா  கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரிக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட உரிமம் நிறைவடைந்த நிலையில் தற்போது உரிமம் புதுப்பிக்க விண்ணப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஈரோடு மாவட்ட சார் ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரியின் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது .

இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கல்குவாரியால் நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளதாகவும், குவாரியில் இருந்து வெளியேறும்
கற்கள் துகள்களால் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை உள்ள விவசாய நிலங்களில் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், அதுமட்டுமின்றி கால்நடைகளுக்கு தீவன பாதிப்பு ஏற்படுவதாகவும் எனவே கல்குவாரிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என விவசாயிகள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்

இதனை தொடர்ந்து மற்றொரு தரப்பினர் கல்குவாரிக்கு ஆதரவாக பேசிய போது கிராம மக்களுக்கும் கல்குவாரி ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது சார் ஆட்சியர் மக்கள் தங்கள் கோரிக்கை குறித்து மனுவாக அளிக்க கூறியதையடுத்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் கிராம மக்கள் மனு அளித்தனர்.

இந்த கூட்டத்தில் சாய்சதா கல்குவாரியானது அரசின் விதிமுறை (SITE CRITIRIEA)  மற்றும் சிறு கனிமசலுகை விதிகள் 1959 பிரிவு 36(1) சட்டத்திற்கு புறம்பாக  குவாரியில் இருந்து 50  மீட்டர் சுற்றளவில்  பாதுகாக்கப்பட்ட வனநிலம் இருப்பதாகவும்,  50  மீட்டர் சுற்றளவில்  தாழ்வழுத்த மின்சார லைன் இருப்பதாகவும், குவாரியில்  கற்கள் வெட்டப்பட்ட இடத்தில் இருந்து 10 மீட்டர் இடைவெளி இல்லாமல் இருப்பதாகவும், 500 மீட்டர் சுற்றளவில் ஆழ்குழாய் கிணறு மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி  இருப்பதாகவும்,  அரசு புறம்போக்கு நிலத்தில் சட்ட விரோதமாக பாதை அமைத்து விதிக்கு புறம்பாக கற்கள் கொண்டு செல்வது என -  பல்வேறு சட்ட விரோதமான வகையில்  உடல் நிலையில் ஏற்கனவே இப்படி இவர்களுக்கு அரசு விதியிலும் விதிமுறைகள் மீறி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அனுமதி அளித்தனர் என கேள்வி எழுப்பினர். 

இந்த கருத்துக்கேற்ப கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் நட்ராஜ் கல்குவாரி குறித்து  தொடர்ந்து பல்வேறு புகார்களை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழல் அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை பல மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.. தமிழ் நாடு அரசு கல்குவாரி அமைப்பதற்கு 36 விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அரசாணை உள்ள நிலையில் பொய்யான ஆவணங்களை அரசு அதிகாரிகளே சமர்ப்பித்துள்ளனர் ‌ குவாரி அமைக்க சம்பந்தப்பட்ட 10 துறை அதிகாரிகள் எப்படி இதற்கு அனுமதி கொடுத்தார்கள். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும் என குற்றம் சாட்டினர்.

எனவே சாய்சதா கல்குவாரிக்கு அனுமதி தரக்கூடாது எனக்கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் பத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் அதிகாரி தலைமையில் நடைபெற்ற கருத்து கேட்டு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சத்தியமங்கலம் செய்தியாளர்  
மகேஷ்பாண்டியன் 
image

Leave Your Comments