தாளவாடி அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்து ராகி பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் கூட்டம் விவசாயி வேதனை அடைந்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள மல்லன்குழி மலை கிராமத்தை சேர்ந்தவர் புட்டுராஜ் இவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் ராகி பயிரிட்டுள்ளார். இன்னும் ஒரு மாதங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் நேற்று நள்ளிரவு புகுந்த காட்டு யானைகள் கூட்டம் ஒன்று அங்கு பயிரிடப்பட்டிருந்த சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் ராகி பயிர்களை காலால் மிதித்தும் தின்றும் சேதப்படுத்தியது .
இந்த நாள் விவசாயி புட்டுராஜ் வேதனை அடைந்துள்ளார்.
யானைகளால் சேதம் அடைந்த ராகி பயிர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் மேலும் காட்டு யானைகள் கூட்டங்களை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளார்.
சத்தியமங்கலம் செய்தியாளர் மகேஷ்பாண்டியன்