சமூக சிற்பிகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பொதுத் தேர்தலை முன்னிட்டு கருத்தாடல் நிகழ்வு
Date: 2024-11-12
சமூக சிற்பிகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பொதுத் தேர்தலை முன்னிட்டு கருத்தாடல் நிகழ்வு
எமது கிராமம் - எமது MPs எனும் தொனிப் பொருளில் கிராமங்களுடனான வேட்பாளர் சந்திப்பு கருத்தாடல் களம் சமூக சிற்பிகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கடந்த (8) ஆம் திகதி அச்சுவேலி மேற்கு தோப்பு கலைமகள் சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.
நிகழ்வின் நோக்கம் யாழ் மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளிலிருந்து வேட்பாளர்களை கிராமத்தில் மக்கள் முன்கொண்டு வந்து பொதுப் பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு வேட்பாளர்களை பதிலளிக்கச் செய்தலாகும்.
இந் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர் சந்திரகாசன் இளங்கோவன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் க.ஞானகுணேஸ்வரி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் கௌரி நித்தியானந்தம் உள்ளிட்ட வேட்பாளர்கள் கலந்து கொண்டு மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
இந் நிகழ்வில் சமூக சிற்பிகள் நிறுவனத்தின் கோப்பாய் மற்றும் வேலனை சமூக நீதிக் கூடத்தின் உறுப்பினர்கள், சிறுவர் நிழல் பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக நிற்பிகள் நிறுவனத்தின் யாழ்ப்பாணம் கிளை உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
தகவல் என்.எம்.அப்துல்லாஹ் கள உத்தியோகத்தர் சமூக சிற்பிகள் நிறுவனம்