மன்னாரில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்த இரண்டு வெதுப்பகங்களுக்கு சீல்

Date: 2024-11-09
news-banner
கடந்த பல மாதங்களாக மன்னார் பொது சுகாதார பரிசோதகர்களால் குறித்த வெதுப்பகங்கள் தொடர்பில் பரிசோதிக்கப்பட்டு 12 குறைப்பாடுகள் நிவர்த்தி செய்யப்படவேண்டும் என கடிதம் மூலம் அறிவிக்கப்பட்ட போதும் குறித்த வெதுப்பகங்கள் அறிவிப்புக்கள் தொடர்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் நேற்றைய தினம் குறித்த வெதுப்பகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது

மன்னார் சிறீ பேக்கரி,மற்றும் வெலிகம போக்கரி ஆகிய இரண்டு வெதுப்பகங்களையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை மூடுமாறும் பொது சுகாதார பரிசோதகர்களால் சுட்டிக்காட்டப்பட்ட 12 சுகாதார பிரச்சினைகளையும் நிவரர்தி செய்யும் வரை குறித்த வெதுப்பகங்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் அனுமதி மறுக்கப்படுவதாகவும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது நீதிமன்ற அறிவித்தல் ஊடாக சுட்டிக்காட்டப்பட்ட வெதுப்பகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

இதே போன்று மன்னார் மாவட்டத்தில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வரும் உணவங்கள் தொடர்பிலும் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது...



மன்னார் நகர்  நிருபர்
ஜோசப் நயன்

image

Leave Your Comments