வடக்கு முஸ்லிம் வெளியேற்றத்தின் 34ஆவது வருட நினைவு கூறல் நிகழ்வு

Date: 2024-10-30
news-banner
வடக்கு முஸ்லிம் வெளியேற்றத்தின் 34ஆவது வருட நினைவு கூறல் நிகழ்வு நாளை 2024.10.30 ஆம் திகதி மாலை 3.00 மணியளவில் யாழ்ப்பாணம் முஸ்லிம் கலாசார சபையின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஜனாப் ஏ.சி.நைசர் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி மஹ்மூத் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

மேற்படி நிகழ்வானது கதை சொல்லும் நிகழ்வு எனும் தலைப்பில் இனச்சுத்திகரிப்பிருந்து மீளெழுவோம் வடக்கு முஸ்லிம் மக்கள்  எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளது. நிகழ்வின் பிரதான விருந்தினர்களாகவும், பேச்சாளர்களாகவும் ஜனாப் பி.எஸ்.எம்.சரபுல் அனாம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் திரு.எம்.திருவரங்கன் மற்றும் மௌலவி எம்.ஏ.பைசர் மதனி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்படி நிகழ்வு தொடர்பான தகவல் தங்களின் செய்திப் பிரசுரத்திற்கான தகவலின் பொருட்டு அறியத்தரப்படுகின்றது.


image

Leave Your Comments